Prediction based YOUR LAGNA
பிறரை ஆளப்பிறந்தவர் நீங்கள். அதிகாரமும் பலமும் எப்போதும் பெற விரும்புவீர்கள்.
நீங்கள் தைரியத்திற்குப் பெயர் போனவர். உங்கள் அதிகாரங்களை நிலை நாட்டவும்,
பிறரை மேற்பார்வைபிடும் திறமையும் உங்களிடம் உள்ளது. உங்களை யாரெல்லாம்
நேசிக்கிறார்களோ அவர்களுக்காக நீங்கள் எதையும் செய்யத் தயாராயிருப்பீர்கள். நீங்கள்
உங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்ப்பீர்கள். உங்கள் கொள்கைகளுக்கு மாறாக
இருந்தாலும் எதிர்ப்பீர்கள். பொது மக்களின் முன்பு உங்கள் திறமைகளை பெரியதாக
விளக்கமாகச் சொல்வீர்கள். ஆதலால் முதல் சந்திப்பே நன்றாக அமையும். பிறருக்கு
ஆலோசனைகள் சொல்வீர்கள். உண்மைகளை அலசி ஆராய்ந்த பிறகே தீர்ப்பு
ஆலோசனைகளைச் சொல்வீர்கள். பல்வேறு பிரச்சினைகளால் உங்கள் மன அமைதியை
இழப்பீர்கள். பிரச்சினைகள் வரும் போது அதனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள்.
உங்கள் கோபத்தை பிறர் முன் கொட்டிவிடுவீர்கள். அதனால் மேலும் எதிரிகள் தோன்று
-வார்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல்களில்
மேலும் சுதந்திரம் வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் பிறரை நம்பி இருக்க
மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு சில நண்பர்களும், உதவியாளர்களும் இருப்பார்கள்.
மருத்துவம், சட்டம், அரசுவேலை, அரசியல் இவற்றில் ஏதாவது ஒன்றில் சிறப்புற்று
விளங்குவீர்கள். எந்த கஷ்டமான காரியமாக இருப்பினும் அதனைச் சிறப்புற நடத்திக்
காட்டுவீர்கள். திருமண வாழ்வில் சில பிரச்சினைகள் வரலாம். இது நடத்தை,
ஆரோக்யம், தொழில் இவைகளால் பிரச்சினைகள் வரலாம். உங்களுக்கு சுவாசம்
சம்பந்தமான பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். நீங்கள் தினமும் உடற்பயிற்சி
போன்றவைகள் செய்து வந்தால் இந்த உடல் பிரச்சினைகளைத் தள்ளி வைக்கலாம்.
********************************************************************************************