Prediction based YOUR LAGNA

அவ்வப்போது, பலகால கட்டங்களில் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். உங்களது பங்குதாரர் தொழில் தோல்வி அடைந்தால் அதற்கான பொறுப்பும் உங்களுடையதே. அது வெற்றி அடைந்தால் அனைவருடனும் பங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்த்து உயரும். பிரச்சினைகள் தீரும். ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்டம் உங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கம் ஒரே ஒரு பிரச்சினை மட்டும் உங்கள் வாழ்நாள் பூராவும் இருக்கும். உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ உங்கள் எதிரியாக மாறும் போது அப்பிரச்சினை, கவலை உங்கள் வாழ்நாள் பூராவும் இருக்கும். நோய்வாய்பட்ட மனிதன்போல் காணப்படுவீர்கள். ஆனால் ஆரோக்யமான உடம்பைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியூர்/ வெளிநாட்டில் வசிப்பீர்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்களை விட வெளியாட்கள் அதிகம் உதவுவார்கள். வெளியாட்களிடமிருந்து பணஉதவி, மதிப்பு மரியாதை முதலியன கிடைக்கும். உங்களுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்களை நேசிப்பீர்கள். சிறிய விஷயமானாலும் உங்களுக்கென்று செய்து கொள்ளாமல் பிறருக்கே செய்வீர்கள். உங்களது குறைவான தகுதி, போதிய ஈடுபாடின்மையால் பல தோல்விகள் வரும். நீங்கள் கடவுளை நம்பாதவர்போல் தோன்றுவீர்கள். ஆனால் கடவுளை மிகவும் நம்புபவர் நீங்களே. கஷ்டமான சூழ்நிலையிலும் வெற்றி பெறும் திறமை சாலி நீங்கள். உங்கள் வாழ்நாள் பூராவும் எதிர்ப்பார்க்காத விரோதிகள் தோன்றுவார்கள். தீய நண்பர்களை விலக்கி, நல்ல நண்பர்களைத் தேடும் போது கவனமாக இருங்கள். கெட்ட நண்பர்கள் வாழ்நாள் பூராவும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பார்கள். பிறருக்கு அறிவுரை கூறும் ஆற்றல் படைத்தவர் நீங்கள். பிறர் தவறாக நடக்கும்போது அறிவுரை கூறத் தயங்கமாட்டீர்கள், பிறர் கூறும் அறிவுரைகளை ஏற்கமாட்டீர்கள். ஆனால் கேட்பீர்கள். நல்ல திருமண வாழ்க்கை அமையும். வாழ்வில் வெற்றிபெற உங்கள் வாழ்க்கைத் துணையின் அறிவுரைகளைக் கேளுங்கள். சிறுசிறு பிரச்சினைகளுக்காக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் போராடவேண்டாம். சிறு பிரச்சினைகளே பூதாகாரமாக வடிவெடுக்கும்.

********************************************************************************************