Prediction based YOUR LAGNA

பொதுப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். பொது வாழ்வில் ஈடுபடுவதை விரும்புவீர்கள். அது தனிப்பட்ட சொந்த விஷயம் எனக்கருதுவீர்கள். தலைமை தாங்கும் தகுதி உண்டு. உங்கள் புகழுக்கு களங்கம், தேக்கம் வருமானால் அச்சேவைகளை விட்டு விலகி விடுவீர்கள். எது சரியோ அதனை ஆதரிப்பீர்கள். அதனால் நிறைய எதிரிகள் தோன்றுவார்கள். உங்கள் எதிரிகள் உங்களை சுயநலவாதி என்பர். நீங்கள் தைரியம் உள்ளவர்போல் தோற்றமளிப்பீர்கள். ஆனால் மனத்தளவில் சின்னப்பிரச்சினை ஆனாலும் மிகவும் தளர்ந்து போவீர்கள். ஆனாலும் உங்கள் வெற்றிற்காகக் கடினமாக உழைப்பீர்கள். சிறுவயதில நீங்கள விருப்பப்பட்ட விஷயங்களில், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று சிந்திக்காமலேயே ஈடுபட்டிருப்பீர்கள். ஆனால் வயதாக ஆக எதையும் செய்யும் முன் பலமுறை யோசிப்பீர்கள். நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் பலமுறை யோசிக்கும் திறனைப் பெற்றுள்ளீர்கள். பல்வேறு பிரச்சினைகளையும், பல்வேறு விஷயங்களையும் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் நிறைய பயணம் போவீர்கள். உங்களிடம் இரக்கம் கருணை இருக்கும். உங்கள் கருத்து மற்றவர்கள் கருத்திற்கு மாறுபட்டிருந்தால் நிச்சயம் அதனை எதிர்ப்பீர்கள். உங்கள் நெருங்கிய உறவினர்/ நண்பர் யாராய் இருந்தாலும் எதிர்க்கத் தயங்க மாட்டீர்கள். ஒவ்வொரு வாதத்திலும் வெற்றிகொள்ளும் திறமையும், சிறப்பாக விவாதிக்கும் திறமையும் உங்களிடம் உண்டு. உங்கள் தீர்ப்பின்படியே நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவு வதைவிட மாட்டீர்கள். நீங்கள் சிக்கனம் விரும்புவீர்கள். ஆனாலும் தேவைக்கு ஏற்ப செலவு செய்யத் தயங்கமாட்டீர்கள். எதிர்பாலினரைக் கவரும் அழகும் திறமையும் தங்களிடம் உள்ளது. நீங்கள் ஆணாயிருந்தால் பெண்களையும், நீங்கள் பெண்ணாய் இருந்தால் ஆண்களையும் கவரும் தன்மை பெற்றிருப்பீர்கள். அத்துடன் அவர்களுடன் இணைந்து வேலை செய்யவும், அவர்களை நம்பவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சில எதிரான குணங்களைக் காண்பீர்கள். தோற்றம், ஆரோக்யம், வழிகாட்டும் நெறி, பொருளாதாரம், படிப்பு இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடமிருந்த மாறு பட்டிருக்கும். பெரும்பாலான கேஸ்களில் நீங்கள் விரும்பும், நேசிக்கும் வாழ்க்கைத் துணையைப் பெற்றிருப்பீர்கள். மனதிற்குச் சந்தோஷம் தரும் கலைகளில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். நீங்கள் வேலை செய்யவும், பிறருக்கு உத்திரவு போடவும் தெரிந்தவர். பிற தலைவர்கள் ஒருவரின் கீழ் வேலை செய்யவிரும்ப மாட்டார்கள். பிறரிடமிருந்து உத்திரவு பெறவும் விரும்ப மாட்டார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல தங்களை விட மேலானவர்களிடமிருந்து உத்திரவு பெறுவதும், அதனை செயல்படுத்துவதும் அவர்களால் இயலாது. ஆனால் நீங்கள் அப்படியல்ல. வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், மிகுந்த வெற்றியையும், முன்னேற்றத்தையும் விரும்புவீர்கள். உங்கள் எதிரிகளால் உருவாக்கப்பட்ட சதிகளை முறியடிப்பீர்கள். நீங்கள் பணவசதி, நண்பர்களின் உதவி, அதிகாரம், ஆளும் வர்க்கத்தின் அதிகாரமும் பெற்று மகிழ்வீர்கள். உங்களுக்கு நல்ல பேச்சுத்திறன் இருக்கும். தோற்றமும் உடையவர் நீங்கள். நல்ல சாப்பாடு, கவர்ச்சி கரமாக ஆடை அணிவது, விலையுயர்ந்த அணிகலன்கள் அணிவதில் கவனம் செலுத்துவீர்கள். பணம் சேமிப்பதில் நல்ல திறமை உடையவர். உங்களிடம் நிறைய சோம்பேறித்தனம் உள்ளது. ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைப் பிறர் தூண்டினால் மட்டிமே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உயர் பதவிக்கு வரும் போது நல்ல ஆளுபவராக இருப்பீர்கள். அப்போது கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். ஆனாலும் ஆடம்பரமாக வாழ்வீர்கள். புகழ் செல்வாக்குப் பெறுவீர்கள். எதிர்பாராத வழிகளில் மேலான பதவிகளை அடைவீர்கள் நீங்கள் மிகவும் புத்திசாலி. சுலபமாக நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர் குழாத்தை விஸ்தரிப்பில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். நட்பு கொள்ள விரும்புபவர்களை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள். ஆரம்பத்தில் சிக்கல் தோன்றலாம். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பீர்கள். ஆனால் எதிர்பாராத் சந்தர்ப்பங்களில் எரிமலை என வெடிப்பீர்கள். பிறர் ஆச்சர்யப்பட்டுப் போவார்கள். ஆனால் அது சற்று நேரமே இருக்கும். திரும்பவும் அமைதியாய் விடுவீர்கள். எதிர்பாராமல் ஏதாவது தீயன நடந்தால் நீங்கள் வருந்துவீர்கள். மனம் துன்புறுவீர்கள். நீங்கள் பிறரிடமிருந்து புகழ்ச்சியையும், பாராட்டையும், மரியாதையும் பெற விரும்புவீர்கள். உங்கள் கொள்கை களையும், கருத்துக்களையும் பிறர் மீது திணிக்க மாட்டீர்கள். திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷத்தைக் கொண்டு வரும். இதயநோய், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். பெரியதாக இருக்கும். அரசு அதிகாரிகள் மூலம் பணம் வரவாகும். நண்பர்களின் திறமையாலும், பேச்சுத் திறனாலும் பணம் வரலாம்.

********************************************************************************************