Predictions based on your Birth star

Predictions based ON BIRTH STAR

பிறருடன் அடிக்கடி முரண்படுவீர்கள். ஆனால் உடனே சாதாரண நிலைக்கு மாறிவிடுவீர்கள். உங்களை நேசிப்பவருக்காகநீங்கள் எதுவும் செய்யத் தயங்கமாட்டீர்கள். நிறைய பயணம் போக விரும்புவீர்கள். நீங்கள் நேசிக்கும் உறவினர்களைஉங்கள் மண்ணிலேயே விட்டு விட்டு நீங்கள் வெளியூர்/ வெளிநாடு போவீர்கள் ஆரோக்யமான உடல் கொண்டவர் நீங்கள்விதிவிலக்காக ஒரே சமயத்தில் நீங்கள் பல வேலைகளைச் செய்வீர்கள். நீங்கள் எப்போதும் சக்தியுடன் தோற்றமளிப்பீர்கள்.பிறரைப் போல் நீங்கள் தோல்விகளைக் கண்டு வருந்த மாட்டீர்கள். வயதில் பெரியவர்களாலும், சமூகத்தில் உயர்ந்தஅந்தஸ்த்து உள்ளவர்களாலும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். உங்களுக்கு அவர்களிடமிருந்து மரியாதையும்கிடைக்கும். நெருங்கிய உறவினர்களால் நிறைய நன்மைகளை அடைய மாட்டீர்கள். சிறுவயது முதலே உங்கள் வாழ்க்கை பற்றி பொறுப்புடன் நடந்து கொள்கிறீர்கள் பொது வாழ்விலும், பணம் சம்பாதிப்பதிலும் நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறீர்கள். எனவே நீங்கள் பிறரை விட அதிகம் அறிவு முதிர்ச்சி பெற்றுள்ளீர்கள். உங்களுக்குப் பல கலைகள் தெரியும். அதை அனுபவிக்கவும் தெரியும். முரண்பட்ட கருத்துக்களை உடையவராயினும் அவர்களோடும் நீங்கள் வேலை செய்வீர்கள். நீங்கள் பிறரைத் துன்புறுத்த மாட்டீர்கள். பல்வேறு விஷயங்களில் நீங்கள் அறிவு நிரம்பப் பெற்றுள்ளீர்கள். உங்கள் திறமைக்கேற்ற கல்வியை நீங்கள் பெறவில்லை. ஆனாலும் ஏதேனும் ஒரு துறையில் வல்லவர்களாயிருப்பவர்களை விட நீங்கள் ஆழ்ந்த அறிவு அத்துறையில் பெற்றிப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வு இனிமையாய் இருக்கும். மேலும் அது மெள்ளமெள்ள இன்பம் அதிகரிக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும் உங்கள் பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் பற்றி அதிகம் கவலைப் படமாட்டீர்கள்.

********************************************************************************************