Predictions based on your Birth star

Predictions based ON BIRTH STAR

பிறருடைய வார்த்தைகளோ அல்லது செயல்களாலோ. நீங்கள் அவற்றை ஏற்காத போது சட்டென்று கோபப்படுவீர்கள். பிறரைப் போல சுலபமாக விட்டு விடவும் மாட்டீர்கள். ஏற்கவும் மாட்டீர்கள் இந்த முன் கோபத்தால் பிறருக்கு நிறைய பிரச்சினைகள் தோன்றும் நீங்கள் தவறு செய்து விட்டதாக நினைத்தால் அல்லது உணர்ந்தால் மேற்கொண்டு போகமாட்டீர்கள். தவறை ஒத்துக் கொள்ளவும் மாட்டீர்கள். மன்னிப்பு கோரவும் மாட்டீர்கள். சிறுவயது முதலே எதனையும் பொறுப்புடன் செய்வீர்கள். கலைகளை அனுபவிப்பதில் கெட்டிக்காரர் நீங்கள். நடனம், இசை போன்ற கலைகளில் பிறப்புமுதலே ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். புதுகார், புதுவீடு போன்ற ஆடம்பர வாழ்க்கையில் ரொம்பவும் நாட்டமுடையவர் நீங்கள். நல்ல தோற்றம் கொண்டிருப்பீர்கள். சிறு வயதுமுதலே கடவுளின் மீது பக்தி கொண்டிருப்பீர்கள். பிறர் உங்கள் உதவியை நாடினால் உடனே செய்வீர்கள். பிறருக்கு உதவுவதில் இன்பம் காண்பீர்கள் எல்லாச் செயல்களிலும் ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் நோக்கங்கள் நிறைவேற கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு எல்லையில்லாப் பேராசையோ, சுய நலமில்லா ஆசையோ இல்லை. பொது வாழ்வில் ஈடுபட்டு தலைமைப் பதவியை அடைவீர்கள்.இது சிறுவயது முதலே நடந்து வரும் விஷயமாகும். சுய நலமில்லாத வாழ்க்கையே இதற்குக் காரணமாகும். அதனால் எதிரிகள் அதிகரிப்பார்கள். உங்களுக்கென்று நேரமிராது. உங்களது கருணை, இரக்கம், பிறருக்கு உதவும் பண்பு, உயர் நோக்கங்கள் இவைகளையே மக்கள் விரும்புவார்கள். ஒன்றைப் பற்றி நினைத்து விட்டால் அதை மறக்க மாட்டீர்கள் அதை வேறொருகோணத்தில் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்கள். பொது வாழ்வில் பிறர் உங்களைப் பின்பற்றுவார்கள். நிறைய பேர் உங்களைப்பின்பற்றுவார்கள். உங்கள் திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். ஜலதோஷம், முதுகுவலி, பல்வேறு போன்ற சிறுசிறு நோய்கள் உங்களைத் தாக்கும். உங்கள் பொறுப்பின்மையால் இந்நோய்கள் வரும். பணம் சம்பாதிப்பதை விட பொது வாழ்வில் ஈடுபடுவதையே விரும்புவீர்கள்.

********************************************************************************************