Predictions based on your Birth star

Predictions based ON BIRTH STAR

உங்களை நேசிப்பவர்களுக்காக நீங்கள் எதுவும் செய்வீர்கள் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபம் அடையும் போது அதன் பின் விளைவுகளைப் பற்றியோசிக்க மாட்டீர்கள். எந்தக் காரியம் செய்தாலும் அதில் வெற்றிபெறுவீர்கள். எதையும் நேர்மையாக, நம்பிக்கையுடன், நீதியுடனும் செய்வீர்கள். இது தான் உங்களிடம் உள்ள கவர்ச்சி, ஈர்ப்புத் திறனாகும். பல்வேறு விஷயங்களைப்பற்றிய அறிவு உங்களுக்கு உண்டு. உங்கள் நோக்கங்கள் நிறைவேற வழக்கமான பாதை விட்டுவிட்டு வழக்கமற்ற பாதைகளையும் தேர்ந்தெடுப்பீர்கள். ஆட்டம் பரமாக செலவு செய்வீர்கள். உங்கள் வருமானத்தைப்பற்றி யோசிக்காமல் தேவைக்குத் தக்கபடி செலவு செய்வீர்கள் பொது வாழ்க்கையை விரும்புவீர்கள். உங்கள் கண்கள் மிகவும் கவர்ச்சி கரமானது. இனிய தோற்றம் கொண்டிருப்பீர்கள். அது பிறரைக் கவரும். சிறு விஷயமானாலும் கோபப்படுவீர்கள். நீங்கள் கோபப்பட்டால் உங்களை பிறரால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் தீர்மானங்களைப் பிறரால் மாற்றவும் முடியாது.பிறர் செய்த தவறுகளை உடனே கண்டு பிடிக்கும் திறமை உங்களிடம் உள்ளது. நீங்கள் சுயகெளரவம் பார்க்கும் மனிதர்.மற்றவர்களை ஆட்டிப்படைக்க, பிறநிறுவனங்களை ஆட்டிப் படைக்கவும் விரும்புவீர்கள். ஆனால் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் நன்றாக வேலை செய்யமாட்டீர்கள். தந்தையிடமிருந்து உதவி பெறுவதைவிட தாயிடமிருந்து அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் தாயை நீங்கள் ஆழமாக நேசிப்பீர்கள். மற்றவர்கள் கூறும் அறிவுரைகளைக் காது கொடுத்து கேட்கமாட்டீர்கள். அதனால் சில சமயங்களில் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். உயர் நீதிக் கொள்கைகளை உடையவர் நீங்கள். உங்கள் ராகு தசை உங்களுக்குத் துன்பம் தரும். அந்த தசை முடிந்தபிறகு வளமை தானே வந்து சேரும். சுக்கிர தசை அடிக்கும். மற்றவர்களை ஜாக்கிரதையாகக் கண் காணியுங்கள். அதுவும் பிறருடன் கூட்டுச் சேர்ந்து தொழில் பண்ண நினைக்கும்போது, புதிய நிறுவனங்களை உருவாக்க நினைக்கும் ஜாக்கிரதையாக பங்குதாரர்களை தேர்ந்தெடுங்கள். இல்லை யென்றால் பிறர் உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

********************************************************************************************