Predictions based on
your Birth star
Predictions based ON BIRTH STAR
உங்கள் உடம்பு உறுதியாக, கட்டு மஸ்தாக இருக்கும். அநீதியை எதிர்ப்பீர்கள் நீங்கள் நீதியைக் கடைபிடிப்பதால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் கொள்கைகளைத் தியாகம் பண்ணிவிட மாட்டீர்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் உங்களுக்கு எதிரிகளாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை அடைய பல கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டிவரும். பிறவியிலேயே பிறரை ஆட்டிப்படைக்கும் வல்லமை உள்ளவர். பல்வேறு பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பது உங்களுக்குக் கைவந்த கலையாகும். உயர் பதவிகளைப் பெறுவீர்கள் வெற்றிக்காக கஷ்டப்பட்டு உழைப்பீர்கள். உங்கள் நடவடிக்கைகளில் நல்ல பண்புகள் இருக்கும். புரிந்து கொள்ளும் திறனும், இன்பத்தை அனுபவிக்கும் திறமையும் இருப்பதால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவீர்கள். உயர்நிலைக்கு வருவீர்கள். வாழ்வின் நோக்கங்களை அடைவீர்கள். நீங்கள் காலம் தவறாதவர். உங்கள் செயல்களில் ஈடுபாடு உள்ளவர். உங்கள் சமுதாயத்தில் பிறரால் அறியப்பட்டுள்ளீர்கள் உங்கள் மனதில் எப்பவுமே கவலை சிந்தனை இருக்கலாம்.ஒரு கவலை தீர்ந்தால் மற்றொன்று முளைக்கும். அல்லது நிரந்தரமான கவலைக்குக் காரணம் இருக்கும். சட்டென்று கோபப்படுவீர்கள் உடனே அக்கோபம் வெடிக்கும். பிறகு உடனே மறந்து விடுவீர்கள். படிப்பில் திறமை உள்ளவர்.பிறர் மனதைப் படிப்பதில் வல்லவர். கர்வம் உள்ளவர். எல்லாச் செயல்களிலும் முழுச் சுதந்திரம் விரும்புவீர்கள். பிறரால் வழிகாட்டப்படவோ, மேற்பார்வையிடுவதையோ, கட்டுப்படுத்தப்படுவதையோ, விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு மேல் பணியாற்று பவர்களையும் முந்துவீர்கள். பிறரைச் சந்தோஷப்படுத்தியோ, விரும்பும் நபர்கள் மூலம் நன்மை அடைவதையோ விரும்பமாட்டீர்கள்அதனால் உங்கள் வாழ்க்கை ஒரு எல்லைக்கு உட்பட்டிருக்கும். எல்லா வேலைகளும், நன்றாகவும், சுத்தமாகவும்,முறைப்படியும் செய்யப் பட்டிருக்க வேண்டும் என விரும்புவீர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டீர்கள். ஆனால் உங்கள் செலவுகள் தேவைக்கேற்ப மாறுபடும். உங்கள் வாழ்க்கை முழுமையான மாற்றம் பெறும். புத்தகங்களை விரும்புவீர்கள்.நீங்கள் எதைச் செய்தாலும் நேரிடையாகச் செய்வீர்கள். உங்கள் திருமண வாழ்வு நன்றாக இருக்கும். உங்கள் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணை பொருக்கமாக இருப்பார்கள். சிறுசிறு நோய்கள் உங்களை பாதிக்கலாம்
********************************************************************************************